சினிமா செய்திகள்

’தளபதி 67’ ஆக்சன் படம் இல்லை: முழுக்க முழுக்க குடும்ப கதையாம்!

Published

on

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தளபதி 67 திரைப்படம் ஆக்சன் படம் இல்லை என்றும் முழுக்க முழுக்க முழுக்க கதையம்சம் கொண்டது என்றும் கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய 4 படங்களுமே அதிரடி ஆக்ஷன் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியான நிலையில் இந்தப் படம் ஆக்ஷன் படமாகத்தான் இருக்கும் என்று கூறப்பட்டது.

ஆனால் தளபதி 67 திரைப்படம் முழுக்க முழுக்க குடும்பத்துடன் சென்டிமென்ட் கலந்த ஒரு ரொமான்ஸ் படம் என்றும் கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் படங்கள் போன்ற ஒரு கதையம்சம் கொண்ட படட்தில் தளபதி விஜய் நடிக்க இருக்கிறார் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது .

ஏற்கனவே வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 66 திரைப்படமும் ஒரு குடும்ப சப்ஜெக்ச் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version