இந்தியா

வெறும் 10 ரூபாய் வித்தியாசத்தில் 5000 கோடி டெண்டரை தட்டித்தூக்கிய டாடா!

Published

on

வெறும் 10 ரூபாய் வித்தியாசத்தில் 5000 கோடி டெண்டரை டாடா நிறுவனம் தட்டி தூக்கிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசு 5,000 கோடி மதிப்பிலான மின்சார பேருந்து கோரும் டெண்டர் சமீபத்தில் அறிவித்தது. இந்த டெண்டரில் டாட்டா மோட்டார்ஸ், அசோக் லேலாண்ட், உள்ளிட்ட வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த டெண்டரில் வெறும் 10 ரூபாய் மட்டுமே குறைவாக இருந்ததால் டாடா நிறுவனத்திற்கு இந்த டெண்டரை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டெண்டரில் புதுடெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், சூரத் ஆகிய நகரங்களில் ஏசி மற்றும் நான் ஏசி தாழ்தள பேருந்துகள், ஏசி, நான் ஏசி மின்சார பேருந்துகள், ஏசி மற்றும் நான் ஏசி சாதாரண மின்சார பேருந்துகள் என ஐந்து பிரிவுகளில் மொத்தம் 5 ஆயிரத்து 450 பேருந்துகள் தயாரிக்க கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டெண்டர் டாட்டா நிறுவனத்துக்கு கிடைத்துள்ளதை அடுத்து நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் நாளைய பங்குச் சந்தையில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெறும் 10 ரூபாய் குறைவாக இருந்ததால் டாடா நிறுவனம் 5000 கோடி மதிப்புள்ள டெண்டர் கிடைத்துள்ளது தொழிலதிபர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version