உலகம்

ஆஸ்திரேலியா ரயில் நிலையத்தில் தமிழரின் வெறிச்செயல்: சுட்டுக்கொன்ற போலீசார்!

Published

on

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் தமிழகத்தை சேர்ந்த 32 வயதான முகமது ரஹ்மதுல்லா சையத் அகமது என்ற நபர் நேற்று கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதையடுத்து அங்குள்ள பாதுகாப்பு போலிசார் அவரை சுட்டுக்கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

#image_title

நேற்று ரயில் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த தூய்மைப்பணியாளர்கள் மீது தமிழகத்தை சேர்ந்த முகமது ரஹ்மதுல்லா சையத் அகமது திடீரென கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் அங்கு உடனடியாக போலீசார் விரைந்து சென்றனர். அந்த நபர் போலீசார் மீதும் கத்தியால் தாக்க முயன்றுள்ளார், இதனையடுத்து போலீசார் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள்.

இதனையடுத்து மருத்துவர்கள் சம்பவ இடத்தில் விரைந்து வந்து அகமதுவுக்கு சிகிச்சை அளித்து உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னர் ஐந்து முறை அஹ்மதுக்கு காவல்துறையுடன் கோவிட்-19 தொடர்பான பிரச்சனைகள் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து சிட்னியில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தால் தமிழகத்தைச் சேர்ந்த முகமது ரஹ்மதுல்லா சையத் அகமது என்பவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் என அடையாளம் காணப்பட்டார். இந்த சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது மற்றும் துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ள துணைத் தூதரகம் இந்த விஷயத்தை நாங்கள் முறையாக கையாளுவோம் என உறுதியளித்துள்ளது.

Trending

Exit mobile version