தமிழ்நாடு

பொங்கல் பண்டிகையை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு எவ்வளவு பணம்? முதல்வர் அறிவிப்பு

Published

on

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்படும் என்பது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தின்போது பொங்கலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் பணம் கொடுக்கப்படுவது தமிழகத்தில் வழக்கமாக இருந்து வருகிறது.

கடந்த ஆண்டு பணம் கொடுக்கப்படாமல் பொங்கல் பொருட்கள் மட்டுமே கொடுக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பொருட்களுடன் பணம் கொடுக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் சட்டம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: 2023 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 2023 ஆம் ஆண்டு தை பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி அட்டைதாரர் மற்றும் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் 1000 ரூபாய் வழங்கிட முடிவு செய்யப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் ரூ.2356.67 கோடி செலவினம் ஏற்படும்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை 2.1.2023 அன்று சென்னையிலும் அன்றைய தினமே மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர் பெருமக்களும் தொடங்கி வைப்பார்கள்.

Trending

Exit mobile version