தமிழ்நாடு
தமிழக முதர்வர் 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு அறிவித்தார்!

#MOU 12.10.2020 அன்று கையெழுத்தானது என்று முதல்வர் ஈபிஎஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதன் மூலம் சுமார், 7,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த தொழில் நிறுவனங்களின் முதலீடுகளைத் தமிழகத்திற்கு ஈர்க்கும் வகையில் அரசு சார்பாகச் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு இருந்தது. இந்த குழுவில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம், தொழில் துறை முதன்மை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இடம் பெற்று இருந்தனர்.
ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி லிமிடெட், அப்போலோ டயர்ஸ், பிரிட்டானிய பிஸ்கெட் கம்பெனி, ஐநாக்ஸ் லிக்யூடு ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிக்கும் நிறுவனம், டி.பி.ஐ. கார்போன் நிறுவனம், மந்த்ரா டேட்டா சென்டர் உட்பட 14 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழில் தொடங்க முன்வந்துள்ள 14 நிறுவனங்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டார். கொரோனா பாதிப்பு காரணமாக தொழில் நிறுவனங்கள் பல்வேறு நாடுகளிலிருந்து இடம்பெயர்ந்து வருகின்றன.
சென்னை, காஞ்சிபுரம், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், திருப்பூர், திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ரூ.10,005 கோடி முதலீட்டில் 14 நிறுவனங்கள் தொழில் துவங்கி வைத்தர்.
இதில் பிரிட்டானியா பிஸ்கெட் கம்பெனி நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அமைக்கப்படுகிறது. ஐநாக்ஸ் லிக்யூடு ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிக்கும் தொழிற்சாலை ஓசூரிலும், அப்போலோ டயர்ஸ் ஓரகடத்திலும் அமைய உள்ளது. மற்ற நிறுவனங்கள் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அமைய உள்ளன.
இந்த 14 நிறுவனங்கள் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் தொடங்க உள்ளது. இதன் மூலம் 7 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















