சினிமா செய்திகள்

அமெரிக்க ராணுவத்தில் தமிழ் நடிகை: புகைப்படம் வைரல்!

Published

on

அமெரிக்க ராணுவத்தில் முதல்முறையாக தமிழ் நடிகை ஒருவர் இணைந்து உள்ளார் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த பல ஆண்டுகளாக தனது பெற்றோருடன் வாழ்ந்து வருபவர் அகிலா நாராயணன். இவர் சமீபத்தில் இந்தியா வந்த போது காதம்பரி என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் என்பதும் அந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து மீண்டும் அமெரிக்கா சென்ற அகிலா நாராயணன் தற்போது அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக இணைந்துள்ளார். இதனை அடுத்து அமெரிக்க இராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை அகிலா நாராயணன் தான் என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க இராணுவத்தில் இணைந்த அகிலா நாராயணனுக்கு திரையுலகினர் ரசிகர்கள் மற்றும் அவரது உறவினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version