சினிமா செய்திகள்

பிரபல தமிழ் நடிகர் காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி

Published

on

பிரபல தமிழ் திரைப்பட வில்லன் நடிகர் காலமானதை அடுத்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .

கமல்ஹாசனின் ‘வெற்றிவிழா’ என்ற திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் சலீம் கவுஸ். அவரது வசன உச்சரிப்பு வித்தியாசமாக இருந்ததால் அவருக்கு தமிழ் திரையுலகில் வாய்ப்புகள் குவிந்தன.

சின்னக் கவுண்டர், செந்தமிழ் பாட்டு, தர்மசீலன், திருடா திருடா, சீமான், ரெட், உள்ளிட்ட பல திரைப் படங்களில் அவர் நடித்துள்ளார். விஜய் நடித்த வேட்டைக்காரன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய புகழைத் தேடிக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சலீம் கவுஸ் நேற்று நெஞ்சு வலியால் அவதிப்பட்டதாகவும் இதனையடுத்து இன்று காலை அவர் காலமானதாக அவருடைய மனைவி தெரிவித்துள்ளார். மறைந்த நடிகர் சலீம் கவுஸ் வயது 70 ஆகும். இந்த நிலையில் நடிகை சலீம் கவுஸ் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Trending

Exit mobile version