சினிமா செய்திகள்

’அவள் பறந்து போனாளே: சூர்யாவின் ’கிடார் கம்பி மேல்’ பாடல் ரிலீஸ்!

Published

on

By

மணி ரத்னம் தயாரிப்பில் உருவான நவரசா என்ற ஆந்தாலஜி திரைப்படம் கடந்த வெள்ளியன்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான நிலையில் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தில் உள்ள ஒன்பது பகுதிகளும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சூர்யா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’கிடார் கம்பி மேல்’ என்ற பகுதி மிகப்பெரும் வரவேற்ப்பை பெற்றது. ஒரு அழகான காதல் கவிதையை படிப்பது போல் இந்த பகுதி இருந்ததாகவும் சூர்யா ரசிகர்கள் விமர்சனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் 45 நிமிட இந்த குறும்படத்தில் கிட்டத்தட்ட நான்கைந்து பாடல்கள் இருந்தது என்பதும் இந்த பாடல்கள் அனைத்தும் சின்னச்சின்ன பாடல்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் உண்மையில் இந்த பாடல் முழு பாடல் ஆக இருந்தது என்பதும் நேரம் கருதி பாடல்கள் சுருக்கமாக படத்தில் காண்பிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ’கிடார் கம்பி மேல்’ பகுதிகளில் இடம்பெற்ற ’அவள் பறந்து போனாளே’ என்ற பாடலை படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இரண்டு நிமிடத்திற்கு மேல் ஓடும் இந்த பாடலின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் இசையமைத்து பாடிய இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார் என்பதும் ஆங்கில வரிகளை கிருஷ்ணா எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Aval Parandhu Ponaaley | Guitar Kambi Mele Nindru | Suriya | Gautham Menon | Karthik | Navarasa

Trending

Exit mobile version