Connect with us

சினிமா செய்திகள்

விமர்சனங்களுக்கு என்ஜிகே ஸ்டைலிலேயே விடை அளித்த சூர்யா!

Published

on

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த என்ஜிகே திரைப்படம் கலவையான விமர்சனங்களுக்கு இடையே வசூல் வேட்டை ஆடி வருகிறது. சூர்யா மற்றும் செல்வராகவன் ரசிகர்கள், படத்திற்கு முட்டு கொடுக்கும் விதமாக, படத்தில் பல லேயர்கள் இருப்பதாகவும், அதனை உற்று நோக்கினால் தான் படம் புரியும் என்றும், இரண்டாம் பாகத்தில் தான் படமே புரியும் என்று சிலர் தங்களுக்குத் தோன்றியதை கருத்துக்களாக பதிவிட்டு வருகின்றனர்.

செல்வராகவனும் சமீபத்தில் டிகோடிங் குறித்து மறைமுகமாக ட்வீட் செய்திருந்தார். ஆனாலும், பெரும்பான்மையான விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள், படத்தில் ஒன்றும் இல்லை சூர்யாவை செல்வரா ஏமாற்றி விட்டார் என்றும், சிலர் சூர்யா தனது குடும்ப இமேஜை காப்பாற்றிக் கொள்ள ராவான காட்சிகளை வெட்டச் சொல்லிவிட்டார் என்றும் கருத்துகள் பரவி வருகின்றன.

இந்நிலையில், படம் குறித்த விமர்சனங்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யா ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், ”என்ஜிகே திரைப்படம் குறித்த அத்தனை கருத்துகளையும் தலைவணங்கி ஏற்கிறேன். மாறுபட்ட கதையம்சத்தையும் நடிகர்களின் வித்தியாசமான நடிப்பையும் நுட்பமாகக் கவனித்துப் பாராட்டிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி” என பதிவிட்டுள்ள சூர்யா, என்ஜிகே படத்தில் வரும் வசனமான கத்துக்கறேன் தலைவரே என்ற ஹேஷ்டேகை டிரெண்டாக்கி உள்ளார்.

வணிகம்15 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?