சினிமா செய்திகள்

முத்துவேல் பாண்டியன் ஆக மாறும் ரஜினிகாந்த்: பிறந்த நாளில் வெளியான சூப்பர் அறிவிப்பு!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’ஜெயிலர்’ திரைப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் நடித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட நாள் நலமுடன் வாழ வேண்டும் என அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பல அரசியல் பிரபலங்களும் அவருக்கு தொடர்ச்சியாக வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’ஜெயிலர்’ . இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினி இன்று தனது 72-வது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி வரும் நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ’ஜெயிலர்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் நடித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் ஜெயிலர் கேரக்டரில் நடித்து வரும் ரஜினிகாந்த் முத்து பாண்டியன் என்ற பெயரில் நடித்து வருகிறார் என்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதை அடுத்து ரஜினி ரசிகர்களை உற்சாகத்தின் உச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version