சினிமா செய்திகள்

பாபா கவுண்டிங் ஸ்டார்ட்ஸ்.. ‘பாபா’ டிரைலர் ரிலீஸ்

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாபா’ திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் ரஜினி மிக மன வருத்தம் அடைந்தார் என்பது கூறப்பட்டது.

ரஜினியே கதை திரைக்கதை எழுதி தயாரித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று அவர் எதிர்பார்த்த நிலையில் இந்த படம் படுதோல்வி அல்லது அவருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

மேலும் இந்த படத்தின் நீளம் அதிகமாக இருந்தது என்றும் அதனால் தான் இந்த படம் வெற்றி பெறவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் 20 ஆண்டுகள் கழித்து தற்போது ‘பாபா’ திரைப்படம் மீண்டும் எடிட்டிங் செய்யப்பட்டு ஒரு சில காட்சிகளில் டப்பிங் செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பின்னணி இசையில் ஏஆர் ரகுமான் சில மாற்றங்கள் செய்து உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘பாபா’ திரைப்படம் புதிய வடிவத்தில் ரிலீசாக தயாராகியுள்ள நிலையில் இந்த படம் வரும் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ள நிலையில் இந்த டிரைலர் இன்றைய தலைமுறைக்கு பிடித்திருப்பதாக கமெண்ட்ஸ்களில் இருந்து தெரிய வருகிறது. இந்த படம் மீண்டும் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ரஜினிகாந்த் ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருக்கும் இந்த படத்தில் நம்பியார், ஆஷிஸ் வித்யார்த்தி, சுஜாதா, விஜயகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.

Baba Official Trailer | Rajinikanth | Manisha Koirala | Suresh Krissna | AR Rahman |

Trending

Exit mobile version