சினிமா செய்திகள்

’அரண்மனை 3’ மோஷன் போஸ்டர் வீடியோ வைரல்!

Published

on

சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் ’அரண்மனை 3’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் ’அரண்மனை 3’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக், மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சுந்தர்சி, ஆர்யா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால், யோகி பாபு, சம்பத் ராஜ், குஷ்பு, மனோபாலா உள்ளிட்டோர் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பினால் தனிமைப்படுத்தி இருக்கும் சுந்தர் சி விரைவில் குணமாகி இந்த படத்தின் அடுத்த கட்ட பணிகளை தொடங்குவார் என்றும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியையும் அவர் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

சுந்தர் சி மற்றும் ஆர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ஆண்ட்ரியா, ராஷிகண்ணா ஆகிய இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். மேலும் சாக்ஷி அகர்வால், விவேக், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார். இந்த படம் அனேகமாக மே மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version