தமிழ்நாடு

ஆசிரியரை அடிக்க கையை ஓங்கிய மாணவன்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ

Published

on

ஆசிரியரை அடிக்க கையை ஓங்கிய மாணவன் ஒருவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் என்ற பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ஆசிரியர் சஞ்சய் காந்தி என்பவர் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் வகுப்பில் இருந்த மாணவர் ஒருவர் தூங்கியதை அடுத்து அந்த மாணவரை எழுப்பி கண்டித்துள்ளார்

இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர் சட்டை பட்டனை கழட்டி அந்த ஆசிரியரை ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் அந்த மாணவன் ஆசிரியரை அடிக்க கையை ஓங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது

இது குறித்த வீடியோவை அந்த வகுப்பில் இருந்த மாணவர் ஒருவர் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்ததை அடுத்து அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட காவல்துறையினர் மற்றும் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை செய்து வருவதாகவும் இந்த சம்பவம் நடந்தது உறுதி செய்யப்பட்டால் மாணவர் ஒரு மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

ஆசிரியரை அடிக்க மாணவன் ஒருவர் கையை ஓங்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 

Trending

Exit mobile version