தமிழ்நாடு

பால் விலை குறைப்பு, மகளிருக்கு இலவச பேருந்து, ரூ.2000 நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Published

on

தமிழக முதல்வராக இன்று காலை 9 மணிக்கு முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டார் என்பதும் முதன்முதலாக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலினுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

தமிழக முதல்வராக பதவியேற்ற பின் பெரியார், அண்ணா, கருணாநிதி சமாதிகளில் மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சற்று முன்னர் தலைமைச் செயலகத்துக்கு வந்து தனது பணியை தொடங்கினார்.

முதல்வராக பதவியேற்றதும் முக ஸ்டாலின் எந்தக் கோப்பில் கையெழுத்திடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் மூன்று முக்கிய உத்தரவுகளுக்கு அவர் கையெழுத்திட்டுள்ளார்.

  • முதலாவது அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக மே மாதம் ரூபாய் 2000 வழங்கப்படும் என்று அறிவித்தார்.

 

  • அடுத்ததாக ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூபாய் 3 குறைத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

  • மூன்றாவதாக நாளை முதல் நகரப் பேருந்துகளில் மகளிர்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற கோப்பிலும் கையெழுத்திட்டுள்ளார்.

முதல் நாளே மூன்று முத்தான திட்டங்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கையெழுத்திட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Trending

Exit mobile version