சினிமா செய்திகள்

முதல்கட்ட படப்பிடிப்புக்கே ரூ.100 கோடி பட்ஜெட்: எஸ்.எஸ்.ராஜமெளலி மீண்டும் பிரமாண்டம்!

Published

on

பிரமாண்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் முதல் கட்ட படப்பிடிப்புக்கு மட்டும் 100 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

பாகுபலி, பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர். ஆகிய படங்களை இயக்கிய ராஜமவுலி அடுத்ததாக மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். முழுக்க முழுக்க அமேசான் காட்டில் நடைபெற இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்க உள்ளது .

mahesh babuஇந்த நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஒரு மாதம் நடைபெற இருப்பதாகவும் இந்த ஒரு மாத பட்ஜெட் மட்டும் ரூ 100 கோடி என்றும் கூறப்படுகிறது. ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் தத்ரூபமான காட்சிகள் இந்த படப்பிடிப்பில் இடம்பெற இருப்பதாக கூறப்படுகிறது .

முதல்கட்ட படப்பிடிப்புக்கே ரூ.100 கோடி என்றால் மொத்த படத்தின் பட்ஜெட் எவ்வளவாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்.

 

Trending

Exit mobile version