உலகம்

இலங்கை எம்பியை அடித்தே கொலை செய்த போராட்டக்காரர்கள்: பெரும் பதட்டநிலை!

Published

on

காரில் சென்றுகொண்டிருந்த இலங்கை எம்பி ஒருவரை போராட்டக்காரர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் பொருளாதார சீரழிவு காரணமாக பொதுமக்கள் கடும் ஆத்திரம் அடைந்து ஆளும் பிரதமர் மற்றும் அதிபர் மாளிகையை நோக்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் ராஜபக்சே சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் போராட்டம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் இலங்கை எம்பி அமரகீர்த்தி என்பவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது போராட்டக்காரர்கள் அவரது காரை வழிமறித்தனர். இதனால் அவர் எம்பி அமரகீர்த்தி துப்பாக்கியை எடுத்து போராட்டக்காரர்கள் மீது சுட்டார். இதனால் மூன்று பேர் காயமடைந்த நிலையில் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் காரிலிருந்த எம்பியை வெளியே இழுத்து போட்டு அடித்து உதைத்தனர் .

இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே எம்பி அமரகீர்த்தி உயிரிழந்ததாக கூறப்படுகிறது இலங்கை எம்பி ஒருவரை அந்நாட்டு மக்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தலைநகர் கொழும்புவில் பெரும் பதட்டநிலை ஏற்பட்டுள்ளது.

 

 

Trending

Exit mobile version