விளையாட்டு
யாருங்க.. இவரை எல்லாம் ஏன் டீமில் எடுத்துக்கொண்டு.. கடுப்பாக்கிய இளம் இந்திய வீரர்!

இந்தூர்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் ஒருவர் ஆடிய விதம் கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது.

#image_title
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து கொண்டு இருக்கிறது . இந்தூரில் நடக்கும் இந்த போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.
இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேட்ச்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பாரத் (வி.கே), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகிய வீரர்கள் ஆடுகின்றனர்.
இந்தியா தற்போது தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 109-10 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 197-10 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து இறங்கிய இந்திய அணி தற்போது 163 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டை இழந்து திணறி வருகிறது.
இந்திய அணியில் பண்டிற்கு பதிலாக கீப்பராக இருக்கும் ஸ்ரீகர் பரத் இன்று 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். முதல் இன்னிங்சில் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த தொடர் முழுக்க எந்த போட்டியிலும் ஸ்ரீகர் பரத் 20 ரன்களை தாண்டவில்லை. அந்த அளவிற்கு மோசமாக ஆடிக்கொண்டு இருக்கிறார்.
கீப்பிங் நன்றாக செய்தாலும் இவரின் பேட்டிங் மோசமாக உள்ளது. இஷான் கிஷான், சஞ்சு சாம்சன் போன்ற வீரரக்ள் வெளியே இருக்கையில் இவர் மட்டும் மோசமாக பேட்டிங் செய்து கொண்டு, இந்திய அணியில் இடம்பிடித்து உள்ளார். இவரை இந்திய அணியில் எடுத்ததை ரசிகர்கள் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர்.