மீண்டும் IPL: எப்போது, எங்கு நடைபெற உள்ளது தெரியுமா?

மீண்டும் IPL: எப்போது, எங்கு நடைபெற உள்ளது தெரியுமா?

இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவலின் இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாகவும், பல்வேறு ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாகவும் 2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மீண்டும் எப்போது தொடங்கும் என்பதைக் குறிப்பிடாமல் தொடரைத் தள்ளி வைத்தது இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ. இந்நிலையில் மீண்டும் ஐபிஎல் எப்போது, எங்கு தொடரும் என்பது குறித்த தகவல்கள் வந்துள்ளன.

வரும் செப்டம்பர் மாதம் 18 அல்லது 19 ஆம் தேதி, ஐபிஎல் தொடரின் மிச்சம் உள்ள போட்டிகள் ஆரம்பிக்குமாம். ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தப் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது எனத் தகவல். மீதம் இருக்கும் போட்டிகளை மூன்று வார காலத்தில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ள இந்திய கிரிக்கெட் வாரியம், ஒரே நாளில் இரண்டு போட்டிகள் என்கிற முறையை கடைபிடிக்க உள்ளதாம்.

2021 ஐபிஎல் சீசனைப் பொறுத்த வரையில், இன்னும் 31 போட்டிகள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். எனவே மூன்று வார காலத்தில் அனைத்துப் போட்டிகளும் முடிக்கப்படலாம் என்று திட்டமிட்டு உள்ளது பிசிசிஐ தரப்பு.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com