இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு!

இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு!

இங்கிலாந்து நாட்டுக்குப் பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் வரும் ஜூன் 16 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அதேபோல இந்திய டெஸ்ட் அணி, நியூசிலாந்துக்கு எதிரான 'டெஸ்ட் சாம்பியன்ஷிப்' இறுதிப் போட்டியையும் ஜூன் 18 ஆம் தேதி முதல் ஆரம்பிக்கிறது.

இந்த இரண்டுக்கும் தயாராகும் வகையில் மும்பையில் மிக அதிக கட்டுப்பாடுகள் கொண்ட குவாரன்டீனை இந்திய அணியின் வீரர்கள் மற்றும் அணி நிர்வாக குழுவினர் ஆரம்பித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுமார் 8 நாட்கள் மும்பை விமான நிலையத்துக்குப் பக்கத்தில் இருக்கும் ஓட்டலில் இந்திய அணி தனிமைப்படுத்தப்படும்.

அதைத் தொடர்ந்து 3 முறை கொரோனா சோதனை எடுத்து, அதில் நெகட்டிவ் என முடிவுகள் வரும் பட்சத்தில் அவர்கள் இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு சென்ற பின்னரும் பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளை வீரர்கள் பின்பற்ற வேண்டி இருக்கும். இதனால், அடுத்த இரண்டு வாரங்கள் இந்திய அணிக்கு மிகவும் கடினமானதாக இருக்கும் எனப்படுகிறது.

இதற்கிடையில் இந்திய அணி வீரர்களின் குடும்பங்களையும் இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்ல பிசிசிஐ, இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகத்திடம் பேசி வருகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com