இலங்கைக்கு செல்லும் இந்திய அணி அறிவிப்பு: கேப்டன் யார் தெரியுமா?

இலங்கைக்கு செல்லும் இந்திய அணி அறிவிப்பு: கேப்டன் யார் தெரியுமா?

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே இங்கிலாந்து சென்று உள்ளது என்பதும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி மோத உள்ளது என்பதும் தெரிந்ததே. இதற்காக இந்திய அணி தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவின் இரண்டாவது அணி விரைவில் இலங்கை செல்ல உள்ளது. இந்த அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இலங்கை செல்லும் இந்திய அணியின் வீரர்கள் குறித்த விபரங்கள் இதோ:

ஷிகர் தவான், புவனேஷ் குமார், பிபி ஷா, படிக்கல், கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், எம். பாண்டே, நிதீஷ் ரானா, இஷான் கிஷான், சாம்சன், சாஹல், ஆர்.சஹார், கௌதம், கே. பாண்டியா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, தீபக் சஹர், சயினி மற்றும் சகாரியா ஆகியோர் இலங்கை செல்லும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியாவின் கிரிக்கெட் அணி இரண்டாக இருந்தாலும் இரண்டு அணியிலும் திறமையான வீரர்கள் உள்ளனர் என்பதும், குறிப்பாக இலங்கைக்கு செல்லும் அணியில் பெரும்பாலும் ஐபிஎல் போட்டிகளில் திறமையை நிரூபித்தவர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com