நான் கேப்டனாக நினைத்தேன், தோனி முந்திக் கொண்டார்: யுவ்ராஜ் ஓப்பன் டாக்

நான் கேப்டனாக நினைத்தேன், தோனி முந்திக் கொண்டார்: யுவ்ராஜ் ஓப்பன் டாக்

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர்களாக இருப்பது மகேந்திர சிங் தோனி மற்றும் யுவ்ராஜ் சிங். தோனி, கேப்டனாக நிறைய சாதனைகளை புரிந்திருக்கிறார் என்றால், அதிரடி பேட்ஸ்மேனாக பல சாதனைகளை படைத்துள்ளார் யுவ்ராஜ்.

இந்திய அணியில் யுவ்ராஜ் முதலில் இடம் பெற்றாலும், தோனிக்குத் தான் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர் நடந்தவை எல்லாம் சரித்திரம் தான்.

இந்நிலையில் தனக்கு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு வழங்கப்படும் என்று நினைத்ததாக யுவ்ராஜ் தற்போது பேசியுள்ளார். அவர், '2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நாங்கள் சரியாக விளையாடவில்லை. அதைத் தொடர்ந்து பல கிரிக்கெட் தொடர்களை வெளிநாடுகளில் விளையாடி வந்தோம்.

அந்த நேரத்தில் அணியின் மூத்தவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டார்கள். யாரும் அப்போது நடக்கவிருந்த டி20 உலகக் கோப்பையை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.

எனவே நான் தான் கேப்டனாக அறிவிக்கப்படுவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால், தோனியின் பெயர் முன்மொழியப்பட்டது. இருப்பினும் கேப்டன் பொறுப்பு ஏற்ற யாராக இருந்தாலும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தோனிக்கு எனது முழு ஆதரவைக் கொடுத்தேன்' எனக் கூறியுள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com