இங்கி., வீரர்கள் என் மீது நிறவெறி தாக்குதல் நடத்தினர்: இந்திய அணி முன்னாள் கீப்பர் 'பகீர்'

இங்கி., வீரர்கள் என் மீது நிறவெறி தாக்குதல் நடத்தினர்: இந்திய அணி முன்னாள் கீப்பர் 'பகீர்'

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் இயன் மோர்கன் மற்றும் அந்த அணியின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் ஆகியோர் நிறவெறியைத் தூண்டும் வகையில் கடந்த காலத்தில் கருத்து தெரிவித்து உள்ளதாக கூறி புகார் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் மீது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விசாரணையை முடுக்கி விட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

சில நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஓல்லி ராபின்சன், 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் நிறவெறியைத் தூண்டும் வகையில் ட்விட்டர் தளத்தில் கருத்து தெரிவித்திருந்தமைக்காக, அவரை சஸ்பெண்ட் செய்து விசாரித்து வருகிறது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இரண்டு நட்சத்திர வீரர்கள் மீதும் நிறவெறிப் புகார் எழுந்துள்ளதால் இங்கிலாந்து கிரிக்கெட் உலகம் மட்டுமின்றி, மொத்த கிரிக்கெட் உலகமும் ஆடிப் போயுள்ளது.

இதைப் போலவே இங்கிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளரும் கடந்த 2010 ஆம் ஆண்டு வாக்கில், நிறவெறியை பிரதிபலிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்திட்டுள்ளார். ஆனால் அது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, 'நான் அப்போது இருந்த மனிதன் கிடையாது. நான் மாறிவிட்டேன்' என்று கூறியுள்ளார். அவர் மீதும் நடவடிக்கைப் பாயலாம் எனப்படுகிறது.

இப்படி அடுத்தடுத்து அதிர்ச்சிகர தகவல்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில், இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஃபரூக் இன்ஜினியர், 'நான் முதலில் இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஆரம்பித்த போது, 'அவன் இந்தியனா?' என்று கேலி செய்தார்கள். நான் பேசும் ஆங்கிலத்தை வைத்து என் மீது நிறவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது' என்று தெரிவித்துள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com