WTC Final: அதிரடி பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணி; வைரல் வீடியோ!

WTC Final: அதிரடி பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணி; வைரல் வீடியோ!

வரும் ஜூன் மாதம் 18 ஆம் தேதி இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடக்க உள்ளது. இங்கிலாந்தில் இந்தப் போட்டி நடக்கிறது. இதையொட்டி கடந்த சில நாட்களாக கடும் கட்டுப்பாடுகள் கொண்ட பயோ-பபுள் சூழலில் இந்திய அணி வீரர்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் குவாரன்டீன் காலத்தை முடித்து ஓர் அணியாக பயிற்சியை ஆரம்பித்து உள்ளார்கள்.

இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் வைரல் வீடியோ இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ வெளியிட்டு உள்ளது.

ஒரு புறம் இந்திய அணி இப்போது தான் பயிற்சியை ஆரம்பித்து உள்ள நிலையில், இன்னொரு அணியான நியூசிலாந்து, இங்கிலாந்துடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்றுத் தொடங்கியது. இந்த இரண்டு போட்டிகளின் பயிற்சி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு கை கொடுக்கும் எனப்படுகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com