அந்நியன் வசனத்தைச் சொல்லி சஞ்சய் மஞ்சரேக்கருக்கு பதில் அளித்த அஷ்வின்!

பிரபல 'சர்ச்சை' வர்ணனையாளரும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான சஞ்சய் மஞ்சரேக்கர், இந்திய கிரிக்கெட் அணியின் சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறியிருந்தார்.
அந்நியன் வசனத்தைச் சொல்லி சஞ்சய் மஞ்சரேக்கருக்கு பதில் அளித்த அஷ்வின்!

தன்னை பற்றி விமர்சித்த சஞ்சய் மஞ்சரேக்கருக்கு, அந்நியன் வசனத்தைச் சொல்லி ரவிச்சந்திரன் அஷ்வின் பதில் அளித்துள்ளார்.

பிரபல 'சர்ச்சை' வர்ணனையாளரும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான சஞ்சய் மஞ்சரேக்கர், இந்திய கிரிக்கெட் அணியின் சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறியிருந்தார்.

அவர், 'அஷ்வினைப் பலரும் இருப்பதிலேயே மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று கூறுகின்றனர். அவர் நல்ல கிரிக்கெட் வீரர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இந்தியர்கள், வெளிநாடுகளுக்குச் சென்றால் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்துத் தான் ஒருவர் கிரேட்டஸ்ட் என்று சொல்ல முடியும்.

அந்த வகையில் தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளில் அஷ்வின் ஒரு முறை கூட 5 விக்கெட்டுகளை ஒரே மேட்ச்சில் எடுத்தது இல்லை.

அஷ்வினை ஒருவர் கிரேட்டஸ்ட் கிரிக்கெட் வீரர் என்று சொன்னால், கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் அஷ்வினுக்கு இணையாக விக்கெட்டுகளை சாய்த்து வருகிறார் ஜடேஜா. அவரைப் போலவே அக்சர் படேலும் தற்போது செயல்பட ஆரம்பித்துள்ளார். இதனால் தான் என்னால் அஷ்வினை தலை சிறந்த வீரர் என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை' எனக் கூறியிருந்தார்.

அஷ்வின் தற்போது 78 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 408 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

சஞ்சய் மஞ்சரேக்கரின் விமர்சனத்துக்கு பதில் அளித்த அஷ்வின், அந்நியன் படத்தில் விவேக்கிடம் விம்ரம் சோகமாகப் பேசும் போது, “அப்படி செல்லாத டா சாரி, மனசெல்லாம் வழிக்கிறது” என்ற வசத்தை போட்டு அதில் அளித்துள்ளார்.

இதை பார்க்கும் போது அஷ்வினின் மனதைச் சஞ்சை ரேக்கரின் விமர்சனம் புண்படுத்தியிருந்தாலும், அதை ஒரு மீம் போட்டு அவருக்கு வழிக்காமல் பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com