தமிழ்நாடு

கடற்கரை-தாம்பரம் மின்சார ரயில் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Published

on

பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

* கடற்கரையில் இருந்து நாளை காலை 11.10 மணிக்கு தாம்பரம் இயக்கப்படும் மின்சார ரயில் (40413), தாம்பரத்தில் இருந்து நாளை இரவு 10.25 மணிக்கு சென்னை கடற்கரை இயக்கப்படும் ரயில் (40144), தாம்பரத்தில் இருந்து இரவு 11.25 மணிக்கு சென்னை கடற்கரை இயக்கப்படும் மின்சார ரயில் (40148) ரத்து செய்யப்படுகிறது.

* வேளச்சேரியில் இருந்து காலை 9.40 மணிக்கு சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில் (41523), வேளச்சேரியில் இருந்து காலை 9.10 மணிக்கு சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில் (41516), 27ம் தேதியும், வேளச்சேரியில் இருந்து இரவு 10.10 மணிக்கு சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில் (41134), 26ம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது.

* வேளச்சேரியில் இருந்து பயணிகள் சிறப்பு ரயில் (41134) நாளை இரவு 10.40 மணிக்கு சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும். சென்னை கடற்கரை- செங்கல்பட்டு- திருமால்பூர் இடையே 61 மின்சார ராயில்கள், செங்கல்பட்டு- திருமால்பூர்- சென்னை கடற்கரை இடையே 62 மின்சார ரயில்கள் என 123 மின்சார ரயில்கள் மட்டுமே 27ம் தேதி இயக்கப்படும். அந்த ரயில்கள் அனைத்தும் சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

* மதுரை நிஜாமுதீன் அதிவிரைவு ரயில் (12651) எழும்பூர் ரயில் நிலையத்தில் 27ம் தேதி 80 நிமிடம் தாமதமாக புறப்படும். ஐதராபாத்- தாம்பரம் சார்மினார் (12760) அதி விரைவு ரயில் வரும் 26ம் தேதி சென்னை கடற்கரை வரை இயக்கப்படும். சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படாது

இவ்வாறு தெற்கு ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Trending

Exit mobile version