ஆரோக்கியம்

ஆஸ்துமா, மார்புச் சளிக்கு மிகச்சிறந்த மருந்து தூதுவளை!

Published

on

சிங்கவல்லி, அளர்க்கம், அளருகம், தூதுணை, தூதுவளம், தூதுவேளை ஆகிய வேறுபெயர்களும் தூதுவளைக்குச் சொந்தம். `வேளை’ வகைகளில் இதுவும் ஒன்று என்பதால் தூது`வேளை’ என்ற பெயர் இதற்கு.

இதில் உள்ள கால்சியம் சத்து, எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதுமட்டுமல்ல, தூதுவளைக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால், பித்தம் குறையும்.

நோய்களை விரட்டும் தூதுவளை

உடலை இளமையாக வைத்திருக்கும் காயகற்ப மூலிகை வகையைச் சேர்ந்தது தூதுவளை, இதன் வேர், இலை, பூ காய் என இதன் அனைத்துப் பகுதிகளும் மருந்தாகப் பயன்படுகிறது.

நினைவாற்றலை அதிகரிப்பதில் இதற்கு முக்கியப் பங்குண்டு. தூதுவளை மூலிகையை அரைத்துத் துவையலாக, தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

தவிர, ரொட்டியாகவும் செய்து சாப்பிடலாம். ஊறவைத்த அரிசியில், தேவையான அளவு தூதுவளையைச் சேர்த்து மாவாக அரைத்து, ரொட்டி போலச் செய்து சாப்பிடலாம்.

தூதுவளை செடியின் பூ

ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் தினமும் தூதுவளை செடியின் பூவை பறித்து பாலில் போட்டுக் காய்ச்சி குடித்தால், நோயின் தொந்தரவு குறையும்.

தூதுவளை பழம்

தாதுவிருத்தி செய்யும் சக்தி கொண்டது தூதுவளை, தூதுவளை பழத்தை, நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும்.

மார்புச் சளிக்கு மிகச்சிறந்த மருந்தாகச் செயலாற்றுகிறது. ஆஸ்துமா, மூச்சுத்திணறல், இருமல், மூக்கில் நீர்வடிதல் மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்களை விரைவாகக் குணப்படுத்துகிறது.

தூதுவளைக் காய்களைச் சாப்பிட்டு வந்தால், குடல் நோய்கள் குணமாகும்.

உடல் வலியைப் போக்கி பலம் தரும். நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொடுக்கும்.

மழைக்கால மூலிகை…

மழைக்காலம் நெருங்குவதால் அனைவருக்கும் சளி, இருமல் உள்ளிட்ட நோய்கள் வரும் வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் நுரையீரல் சார்ந்த நோய்களின் தாக்கத்தைக் குறைப்பதில் தூதுவளை பெரும் பங்கு வகிக்கிறது.

குறிப்பாக ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகிறது. தூதுவளையை உலர வைத்துப் பொடி செய்து வைத்து பாலில் கலந்து சாப்பிடலாம். தூதுவளை இலையைத் துவையல் அரைத்தும், ரசம் வைத்தும் சாப்பிடலாம்.

Trending

Exit mobile version