ஆரோக்கியம்

கர்ப்ப காலத்தில் தூக்கம் என்பது இவ்வளவு முக்கியமா?

Published

on

ஒரு பெண்ணுக்கு கர்ப்ப காலம் என்பது மறுபிறவி என்பதும் குழந்தையை பெற்றெடுக்கும் வரை அவர் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் மற்றும் முன்னோர்கள் கூறி வந்தனர்.

இந்த நிலையில் கர்ப்ப நேரத்தில் தாய் செய்யும் சின்ன சின்ன தவறுகள் காரணமாக குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்று பல ஆய்வு முடிவுகளின்படி தெரிய வந்துள்ளது. அதில் முதலில் கூறும் காரணம் என்னவென்றால் தூக்கம்.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் குறைந்தது 7 மணி நேரம் முதல் 9 மணி நேரம் வரை கண்டிப்பாக தினமும் தூங்க வேண்டும். குறைவான தூக்கம் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கும் என்று பல ஆய்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் கர்ப்பமாக இருக்கும் தாய் அதிக நேரம் தூங்குவதும் ஆபத்து தான். குறிப்பாக ஒன்பது மணி நேரத்திற்கு மேல் தூங்கினாலும் குழந்தைக்கு ஆபத்து என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு சில தாய்மார்கள் கர்ப்பமாக இருக்கும் போது தூக்கம் இல்லாமல் தவித்து வருகின்றனர். அப்பேர்பட்டவர்கள் கண்டிப்பாக ஏதாவது ஒரு வழி செய்து தூங்கவேண்டும். புத்தகம் படிக்கலாம் அல்லது சிறிது நேரம் உடற்பயிற்சி செய்தால் தூக்கம் வந்துவிடும் என்பது குறிப்பிடதக்கது. எனவே குறைந்த அளவு தூங்குவதை கண்டிப்பாக கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும்.

மேலும் கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் போகவேண்டும் போல் தாய்மார்களுக்கு இருக்கும். அதனால் பெண்கள் தூங்கும் போது இடையிடையே இருந்து சிறுநீர் கழித்து விட்டு வருவார்கள் இதன் காரணமாகவும் தூக்கம் கெடும் வாய்ப்பு இருப்பதால் இந்த பிரச்சனையையும் மருத்துவரை அணுகி சரி செய்து கொள்ள வேண்டும்.

நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு தூக்கம் குறைவாகவே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் மருத்துவரின் ஆலோசனையை அணுகி தூங்குவதற்கு மருந்து எடுத்துக்கொள்ளலாமா என்பதை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

தூக்கத்தை ஒரே மாதிரியான நேரத்தில் வைத்துக் கொண்டால் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் விழிக்க வேண்டும் என்றும் அந்த நேரத்தில் சரியாக குழந்தையும் தூங்கி ஓய்வு எடுத்துக் கொள்ளும் என்றும் அதனால் குழந்தை மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

எனவே கர்ப்ப காலத்தில் தூக்கம் என்பது மிகவும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு சரியான தூக்கத்தை அளவில் கடைபிடித்தால் பிறக்கும் குழந்தை எந்தவிதமான பிரச்சனையும் இன்றி பிறக்கும் என்பதை தாய்மார்கள் ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும்.

Trending

Exit mobile version