சினிமா செய்திகள்

காமெடி, கிளாமர், ஆக்சன்: எஸ்.ஜே.சூர்யாவின் ‘கடமையை செய்’ டிரைலர்

Published

on

சிம்பு நடித்த மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யாவின் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அவருடைய சமீபத்திய படங்களுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்தனர் என்பதை பார்த்தோம் .

இந்த நிலையில் எஸ்ஜே சூர்யா ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ’கடமையைச் செய்’. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது திடீரென இந்த படத்தின் நாயகியான யாஷிகாவுக்கு கார் விபத்து ஏற்பட்டதால் படப்பிடிப்பு தாமதமானது .

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த டிரைலரில் எஸ்ஜே சூர்யா முதல் பாதியில் ரொமான்ஸ் காமெடி ஆகியவற்றில் கலக்கியுள்ளதாகவும், இரண்டாவது பாதியில் அதிரடி ஆக்ஷனில் பின்னி பெடலெடுத்து உள்ளதாகவும் ட்ரைலரில் இருந்து தெரிய வருகிறது. இந்த ட்ரைலரில் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Kadamaiyai Sei Official Trailer - SJ Suryah | Yashika Anand | Venkatt Ragavan | Ganesh Entertainment

Trending

Exit mobile version