சினிமா செய்திகள்

சாய்பல்லவியுடன் நடிப்பது கொஞ்சம் கஷ்டம் தான்: சிவகார்த்திகேயன்

Published

on

சாய்பல்லவி சூப்பராக டான்ஸ் ஆடுவார் என்றும் அவருடன் டான்ஸ் ஆடி நடிப்பது கஷ்டம் தான் என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கமல்ஹாசனின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் புகைப்படம் எஸ்கே 21. இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடித்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் இந்த படம் குறித்து கருத்து கூறிய சிவகார்த்திகேயன் சாய் பல்லவி இந்த படத்தில் இணைந்ததற்கு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தான் காரணம் என்றும் அவர் மிகுந்த திறமையானவர் என்றும் குறிப்பாக நடனம் ஆடுவதில் மிகவும் திறமையானவர் என்றும் அவருடன் இணைந்து நடனம் ஆடுவது கஷ்டம்தான் என்றாலும் பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் விரைவில் ஒரு புதிய பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசை என்றும் ஆலியா பட் தான் நாயகி என்றும் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். மேலும் அந்த படம் கண்டிப்பாக ஃபேண்டஸி படமாகத்தான் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார் .

மேலும் டான் படம் குறித்து கூறியபோது முதலில் டான் படத்தின் கதையை சிபி கூறியவுடன் என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை என்றும் எனக்கு கதை பிடிக்கவில்லை என்று நினைத்து அவரே கதையை மாற்றி உள்ளார் என்றும் ஆனாலும் அவர் கதையை மாற்றிய உடன் எனக்கு ரொம்ப பிடித்தது என்றும் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version