சினிமா செய்திகள்

‘அண்ணாத்த’ ஒத்திவைப்பு… சூர்யா 39 மீது கவனம் செலுத்தத் தொடங்கிய ‘சிறுத்தை’ சிவா..!

Published

on

இயக்குநர் சிறுத்தை சிவா நடிகர் சூர்யா-வின் 39-வது திரைப் படத்தை இயக்க உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி தான்.

ஆனால், நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை நிறைவு செய்த பின்னர் தான் சூர்யா படத்தைத் தொடங்குவதாக இருந்தார் சிறுத்தை சிவா. ஆனால், ரஜினியின் உடல்நிலை காரணத்தாலும் கொரோனா தொற்று பதட்டம் இன்னும் நிலவுவதால் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போது சூர்யா படத்துக்கான பணிகளைத் தொடங்கிவிட்டாராம் சிவா. விரைவில் நாயகி மற்றும் இதர நடிகர்கள், இசை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

இயக்குநர் சிவா முதன் முதலாக நடிகர் கார்த்தியின் சிறுத்தை படத்தின் மூலமாகத் தான் அறிமுகமாகி பிரபலமானார். கார்த்தி உடனான படப்பிடிப்பின் போதே சூர்யா உடன் ஒரு படம் என சூர்யா- சிவா இருவரும் பேசி முடிவு செய்து விட்டனராம். 2011-ம் ஆண்டு எடுத்த முடிவை தற்போது தான் நிகழ்த்த உள்ளனர் இந்தக் கூட்டணியினர். சூர்யா தனது 39-வது படப்பிடிப்புகளின் நடுவிலேயே சூர்யா 40 படத்துக்கான படப்பிடிப்புகளிலும் கலந்து கொள்ள உள்ளாராம்.

சூர்யா 40 திரைப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்க உள்ளது.

Trending

Exit mobile version