சினிமா செய்திகள்
சிம்பு நடிப்பில் கமல் தயாரிக்கும் படம்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நடிகர் சிம்பு பத்து தல படத்திற்குப் பிறகு எந்த படத்தில் நடிக்க உள்ளார் என்பது நீண்ட நாட்களாகக் கேள்வி எழுந்து வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃப்ளிம்ஸ் இண்டர்னேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சிம்பு நடிக்க உள்ளார். இந்த படத்தினை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தாள் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன.

Simbu
இப்போது அதனை உறுதி செய்யும் விதமாகச் சிம்பு நடிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கும், ராஜ் கமல் ஃபிளிம் இண்டர்னேஷன்ல் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வியாழக்கிழமை வெளியாகியுள்ளது.
Dreams do come true 😇#STR48#Ulaganayagan #KamalHaasan #Atman #SilambarasanTR #BLOODandBATTLE #RKFI56_STR48@ikamalhaasan @SilambarasanTR_ @desingh_dp #Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/QxdCkUPFo9
— Silambarasan TR (@SilambarasanTR_) March 9, 2023
ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் 56வது படம் இது. சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 48வது படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. கமல் ஹாசனுடன் சேர்ந்து விஜய் டிவி மகேந்திரனும் இந்த படத்தினை தயாரிக்க உள்ளார்.
சில நாட்களுக்கு முன்னதாக யூடியூப் சேனலுக்கு சிம்பு அளித்த பேட்டியில் தேசிங்கு பெரியசாமி தனக்கு சொன்ன கதை அவரை மிகப் பெரிய அளவில் கவர்ந்ததாகவும் கூறப்பட்டது.
மேலும் சிம்பு நடிப்பில் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவாக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கமல் ஹாசனுக்காக தான் கேட்டு வந்த 35 கோடி ரூபாய் சம்பளத்தையும் சிம்பு குறைத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
An alliance forged to push frontiers of success & across generations! #STR48 #Ulaganayagan #KamalHaasan #Atman #SilambarasanTR #BLOODandBATTLE #RKFI56_STR48@ikamalhaasan @SilambarasanTR_ @desingh_dp #Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/4i7uawXwHG
— Raaj Kamal Films International (@RKFI) March 9, 2023
சிம்பு நடித்துள்ள பத்து தல படம் மார்ச் 30ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.