சினிமா செய்திகள்

தொடர் தோல்வியில் தனுஷ், வெற்றி முகத்தில் சிம்பு: 10 வருடத்தில் தலைகீழ் மாற்றம்!

Published

on

கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் நடிகர் தனுஷ் கோலிவுட்டில் மட்டுமின்றி பாலிவுட் ஹாலிவுட் என புகழ் பெற்று வெற்றியின் உச்சத்தில் இருந்தார் என்பதும் அந்த நேரத்தில் சிம்பு படங்கள் வாய்ப்பு கூட இல்லாமல் வீட்டில் மூலையில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது மாநாடு என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்து விட்டு சுறுசுறுப்பாக வெற்றி படங்களில் சிம்பு நடித்து கொண்டிருகும் நிலையில் தொடர் தோல்விகளால் தனுஷ் துவண்டு வருவது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பின்னர் வெளிவந்த என்னை நோக்கி பாயும் தோட்டா, கர்ணன், ஜகமே தந்திரம் ஆகிய திரைப்படங்கள் அவருக்கு வசூல் அளவில் கைகொடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று ஓடிடியில் வெளியான ’மாறன்’ திரைப்படமும் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவர் நடித்து வரும் திருச்சிற்றம்பலம் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை என்பதும் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் நானே வருவேன் என்ற ஒரு படம் மட்டுமே தனுசுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சிம்பு கடந்த சில ஆண்டுகளாக வெற்றி கிடைக்காத நிலையில் மாநாடு என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து தனது மார்க்கெட்டை மீண்டும் நிலை நிறுத்திக் கொண்டார். அவர் நடித்துவரும் வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல ஆகிய திரைப்படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் அவரை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் வரிசையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

10 ஆண்டுகளில் சிம்பு-தனுஷ் ஆகியவர்களின் திரைப்பட வாழ்க்கை தலைகீழாக மாறி இருப்பது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Trending

Exit mobile version