சினிமா செய்திகள்

ரூ.15 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறியது யார்? பரபரப்பு தகவல்

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் முழுவதும் பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே செல்பவர் யார் என்ற பரபரப்பு பார்வையாளர்கள் மத்தியில் இருந்தது.

ஆரம்பத்தில் 3 லட்சம் மதிப்புடன்ஆரம்பித்த பணப்பெட்டி 8 லட்சம், 9 லட்சம் என உயர்ந்து கடைசியில் 15 லட்சம் என்று முடிவுக்கு வந்தது. இந்த 15 லட்சம் பணத்தை எடுக்க ஸ்ருதி மற்றும் ஜூலி இடையே கடும் போட்டி நடைபெற்றது.

இதனையடுத்து இருவருக்கும் ஒருசில டாஸ்குகள் வைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து டாஸ்குகளில் ஸ்ருதி வெற்றி பெற்றதையடுத்து அவர் பணப்பெட்டியை வெல்லும் போட்டியாளர் என பிக்பாஸ் அறிவித்தார். இதனை அடுத்து 15 லட்ச ரூபாய் பண பெட்டியுடன் நேற்று ஸ்ருதி வெளியேறினார் .

அந்தப் பெட்டியை எப்படியாவது எடுக்க வேண்டும் என்று ஜூலி தீவிர முயற்சி செய்தும் அவருக்கு நேற்று அதிர்ஷ்டம் இல்லை. இந்த நிலையில் சுருதியின் முடிவு சரியானது என அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Trending

Exit mobile version