இந்தியா

அதிர்ச்சி.. மொத்தமாக எரிந்த 40 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

Published

on

நாசிக்கில் ஒரே நேரத்தில் மொத்தமாக 40 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எரிந்து நாசம் ஆன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களாக, தொடர்ந்து எலக்ட்ரிக் வாகனங்கள் எரியும் செய்திகள் வெளியாகி வருகின்றன. நாசிக்கில் ஜித்தேந்திரா எலக்ட்ரிக் நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து வருகிறது.

இந்த நிறுவனத்திலிருந்து 40 ஸ்கூட்டர்களை டிரக் ஒன்றில் ஏற்றி டீலர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த டிரக்கில் கொண்டு செல்லப்பட்ட 40 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் எரிந்து நாசம் ஆகியுள்ளன.

ஜித்தேந்திரா எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலை அருகிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தால் உயர் சேதும் ஏதும் நிகழவில்லை. விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

எலக்ட்ரிக் வாகன விற்பனை அதிகரித்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இது போல எலக்ட்ரிக் வாகனங்கள் எரிந்துவிட்டன என வெளியாகும் செய்திகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Trending

Exit mobile version