சினிமா செய்திகள்

விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை பார்த்த ஷாலினி அஜித்: என்ன சொன்னார் தெரியுமா?

Published

on

விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் கடந்த 13ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படத்தை நேற்று அஜீத்தின் மனைவி ஷாலினி அஜித் பார்த்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் ஷாலின் அஜித் தனது மகள் அனோஷ்காவுடன் வந்து படத்தைப் பார்த்ததாகவும் அவர் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து பார்த்ததாகவும் அவருடன் படம் பார்த்தவர்கள் கருத்து கூறியுள்ளனர் .

இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படம் பார்த்த ஷாலினி அஜித், ‘பீஸ்ட்’ திரைப்படம் நன்றாக உள்ளது என்றும் விஜய்யின் டான்ஸ் மற்றும் ஆக்ஷன் சூப்பராக உள்ளது என்றும் இந்த படம் தனக்கும் தனது மகளுக்கும் மிகவும் பிடித்ததாகவும் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே விஜய்யுடன் காதலுக்கு மரியாதை உள்பட ஒரு சில திரைப்படங்களில் ஷாலினி அஜீத் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கு ஊடகங்கள் மற்றும் விமர்சகர்கள் நெகட்டிவ் குறிப்பாக அஜித் ரசிகர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வரும் நிலையில் ஷாலினி அஜீத் இந்த படத்தை பார்த்து நன்றாக இருக்கிறது என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Trending

Exit mobile version