சினிமா

ஜூனுக்கு ஜூட் விட்ட ஜவான்! புதிய ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?

Published

on

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள ஜவான் திரைப்படம் ஜூன் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.

ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டு அதனை மாற்றுவது புதிய ஃபேஷன் ஆகிவிட்டது போல, ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியால் மாவீரன் ரிலீஸ் தேதி மாறிய நிலையில், தற்போது ஷாருக்கானின் ஜவான் படத்தின் ரிலீஸ் தேதியிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

#image_title

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு சிறிது காலம் தேவைப்படுவதால் ஷாருக்கானின் ஜவான் படம் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸ் ஆகும் என புதிய மோஷன் போஸ்டர் உடன் அட்டகாசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதி வெளியான ஷாருக்கானின் பதான் திரைப்படம் இன்னமும் சில இடங்களில் ஓடி வரும் நிலையில், அந்த படம் ஒட்டுமொத்தமாக 1000 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி உள்ளது.

#image_title

இந்நிலையில், ஜவான் படத்துக்கும் பக்காவாக ப்ரமோஷன் செய்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் படத்தை வெளியிட இயக்குநர் அட்லீ திட்டமிட்டுள்ளார்.

இந்த படத்தில் இளைஞனாகவும் வயதான தோற்றத்திலும் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ளார். ஷங்கர் படத்தின் கதை போல ஒட்டுமொத்த சிஸ்டத்தையும் தனி ஒரு ராணுவ வீரன் எதிர்க்கும் கதையைத் தான் ஜவான் படத்தில் இயக்குநர் அட்லீ எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இயக்குநர் அட்லீ அடுத்து விஜய்யின் தளபதி 68 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்த படம் தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் கைவசம் செல்லும் என உறுதியான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மீண்டும் ஒரு பாலிவுட் நடிகர் படத்தைத் தான் அட்லீ இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.

Trending

Exit mobile version