தமிழ்நாடு
எக்ஸ்பிரஸ் ரயில் நெருங்கும்போது செல்பி: கானா பாடகர் பரிதாப பலி!

ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டு ரயில் நெருங்கும்போது செல்பி எடுக்கும் பழக்கத்தை உடைய கானா பாடகர் ஒருவர் ரயில் மோதி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள வெங்கடேசன் என்பவர் கானா பாடல்கள் பாடி அதனை யூடியூபில் பதிவு செய்து வந்தார். அவரது பாடல்கள் நண்பர்கள் வட்டாரத்தில் மிகவும் பிரபலமாகின நிலையில் அவ்வப்போது அவர் தனது யூடியூபில் வித்தியாசமான வீடியோக்களை போட வேண்டும் என்பதற்காக ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டு ரயில் மிக அருகில் வரும்போது செல்பி எடுத்து அந்த வீடியோக்களை அவர் பதிவு யூடியூபில் செய்வதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் தன்னை நெருங்கும் போது செல்பி எடுக்க வெங்கடேசன் முயற்சி செய்துள்ளார். அப்போது அவர் செல்போனில் பட்டனை தட்டுவதற்கு முன்பாக ரயில் அவரை தட்டி தூக்கிவிட்டது.
இதில் படுகாயமடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மறைவு அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ரயில்வே தண்டவாளத்தின் மீது நின்றுகொண்டு செல்பி எடுக்க கூடாது என ரயில்வே துறையினர் பல முறை எச்சரித்தும் அந்த எச்சரிக்கையை மதிக்காமல் செல்பி எடுத்தால் இன்னொரு உயிர் பலியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.