இந்தியா
சேகர் ரெட்டி மகளுக்கு நிச்சயித்த மாப்பிள்ளை திடீர் மரணம்.. என்ன ஆச்சு?
Published
1 month agoon
By
Shiva
சேகர் ரெட்டி மகளுக்கு திருப்பதி தேவஸ்தான நிர்வாகியின் மகனுக்கு நிச்சயதார்த்தம் செய்து இருந்த நிலையில் திடீரென மணமகன் மரணம் அடைந்து விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சேகர் ரெட்டியின் மகளுக்கும் திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகி தர்மா ரெட்டியின் மகன் சந்திரமௌலி என்பவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இந்த திருமணத்தை நடத்தி வைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சந்திரமெளலிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் தொடர்ச்சியாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் சந்திரமெளலிக்கு எக்மோ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழந்து வந்ததாகவும் அதனால் அவர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை சந்திரமெளலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவரது கண்கள் தானம் வழங்க ஒப்புக் கொண்டு இருந்ததால் அவரது கண்கள் மட்டும் தானம் வழங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் ஒரு சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சேகர் ரெட்டியின் வருங்கால மாப்பிள்ளை உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
You may like
-
கணம் ஹீரோ கல்யாணத்துக்கு ரெடி; அமெரிக்க டெக்கியை நிச்சயம் பண்ண சர்வானந்த்!
-
முகேஷ் அம்பானி வீட்டில் இன்னொரு திருமணம்.. பிரமாண்டமாக நடந்த நிச்சயதார்த்தம்!
-
யாஷிகாவுக்கு திடீர் திருமணம்: மாப்பிள்ளை யார் என்பது சஸ்பென்ஸ்!
-
மறைந்த நடிகர் பால்வாக்கரின் மகள் நிச்சயதார்த்தம்: மாப்பிள்ளையும் ஒரு நடிகர் தான்!
-
நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது: நயன்தாரா அறிவிப்பு
-
விரலோடு உயிர்கூட கோர்த்து… விக்னேஷ் சிவன் – நயன் நிச்சயதார்த்தமா?