சினிமா செய்திகள்
விஜயின் லியோ திரைப்படம்: பெயரை மாற்ற சீமான் அறிவுரை!

பொங்கலுக்கு களமிறங்கிய வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் புதிய திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகை திரிஷா நடிக்கிறார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறார்கள்.

#image_title
இந்த லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பெயாரான ‘லியோ’-க்கு எதிர்ப்பை கிளப்பியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் சீமான்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழர்கள் தான் படம் பார்க்கிறார்கள். நாம் தான் நம் தாய்மொழியை அழியாமல் சிதையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த பொறுப்பு தம்பி விஜய்க்கும் இருக்கு. தொடர்ந்து பிகில், விசில் என தலைப்பு வருகிறது. அதனால் அதை மாத்திக்கணும் என அவர் தெரிவித்துள்ளார். விஜயின் பிகில், மாஸ்டர் போன்ற படங்களின் பெயர்களும் இதற்கு முன்னர் மாற்றப்பட வேண்டிம் என கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.