சினிமா செய்திகள்

நெஞ்சுக்கு நீதி’ படத்தை இந்தியில் எடுத்தால் நன்றாக இருக்கும்: அமைச்சரின் பேச்சால் பரபரப்பு

Published

on

உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தை ஹிந்தியில் எடுத்தால் நன்றாக ஓடும் என்று அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாக உள்ளது

இந்தியில் சூப்பர் ஹிட்டான ஆர்டிகள் 15 என்ற படத்தின் ரீமேக் படம்தான் நெஞ்சுக்கு நீதி என்பதும் இந்த படத்தில் உதயநிதி நடித்துள்ளார் என்பதும் அருண்ராஜா காமராஜ் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடி வரும் நிலையில் இந்த படத்தை திமுக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் பார்த்து தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்

அந்த வகையில் ஒரு அமைச்சர் இந்த படத்தை பார்த்து நெஞ்சுக்கு நீதி படத்தை ஹிந்தியில் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இன்னொரு அமைச்சர் நெஞ்சுக்கு நீதி படத்தில் காக்கி சட்டையில் உதயநிதியை பெரியாராக பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்

நெஞ்சுக்கு நீதி திரைப்பமே ஆர்ட்டிகிள் 15 என்ற இந்தி படத்தின் ரீமேக்தான் என்பது கூட அந்த அமைச்சருக்கு தெரியவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் கிண்டலடித்துள்ளார். மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கூறியிருப்பதாவது:

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற, மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தம்பி உதயநிதி நடித்த படத்தை முதல் காட்சி பார்த்துவிட்டுப் படம் எடுத்துப் பகிர்ந்து படத்தைப் பாராட்டி பதிவிடுகிறார்கள். டிக்கெட்களை வாங்கி இலவசமாகக் கொடுக்கிறார்கள்.. படம் பார்ப்பவர்களுக்கு பிரியாணி போடுகிறார்கள். சிறப்பான மக்கள் பணி! வாழ்க திராவிட மாடல்! என கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

 

Trending

Exit mobile version