தமிழ்நாடு

கருப்பா இருக்குற எல்லாரும் திராவிடர்களா? எருமை மாடு திராவிடனா? சீமான் கேள்வி

Published

on

கருப்பாக இருக்கும் எல்லோரும் திராவிடர்கள் என்றால் எருமை மாடு திராவிடனா என்ற கேள்வியை நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் இந்தியர்கள் இல்லை, தமிழர்கள் இல்லை, திராவிடர்கள் என ஒரு கூட்டம் கூறி வருகிறார்கள். திராவிடர்கள் என்றால் தென்னிந்தியா முழுமையும் சேர்ந்ததுதான் என்று பழங்காலத்தில் கூறப்பட்டது. ஆனால் மலையாளிகள் கன்னடர்கள் தெலுங்கர்கள் தங்களை திராவிடர்கள் என்று கூறிக் கொண்டதில்லை. தமிழர்கள் மட்டுமே திராவிடர்கள் என்ற அடைமொழியை தூக்கிப் பிடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நான் கருப்பாக இருப்பதால் நான் கருப்பு திராவிடன் என சமீபத்தில் யுவன்சங்கர்ராஜா செய்த பதிவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து பாஜக தலைவர் அண்ணாமலை, யுவன்சங்கர்ராஜா கருப்பு என்றால் நான் அண்டங்காக்கா நானும் திராவிடன் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே பிரதமர் மோடி உள்பட பலரும் திராவிடர்கள் என்று கூறிய நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சீமான் ’கருப்பாக இருப்பவர்கள் எல்லாம் திராவிடர்கள் என்றால் ஆப்பிரிக்காவில் உள்ள எல்லோரும் திராவிடர்களா? எருமைமாடு கூட தான் கருப்பாக இருக்கிறது அதுவும் திராவிடர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். அவரது இந்த கேள்வி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Trending

Exit mobile version