வணிகம்

எஸ்பிஐ vs பிஎன்பி vs ஹெச்டிஎப்சி vs பாங்க் ஆப் இந்தியா: எந்த வங்கியில் ஹோம் லோன் வட்டி குறைவு!

Published

on

நகரங்களில் வசிப்பவர்கள் ஹோம் லோன் வாங்கி வீடு வாங்குவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா கால கட்டங்களில் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டதால் ஹோம் லோன் வட்டி விகிதம் குறைக்கப்பட்டது.

இப்போது கொரோனா தொற்று பரவல் முடிந்த நிலையில் உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்கும் விதமாக ஆர்பிஐ உள்ளிட்ட சர்வதேச மத்திய வங்கிகள் ரெப்போ வட்டி விகிதத்தைத் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

Home Loans

அதனால் ஹோம் லோன் உள்ளிட்ட கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் அதிகரித்து வருகிறது. எனவே எஸ்பிஐ vs பிஎன்பி vs ஹெச்டிஎப்சி vs பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளில் எதில் குறைந்த வட்டி விகிதத்தில் ஹோம் லோன் கிடைக்கிறது என இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

பாங்க் ஆப் பரோடா

பொதுத் துறை வங்கி நிறுவனங்களில் ஒன்றான பாங்க் ஆப் பரோடா சென்ற மாதம் ஹோம் லோன் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்தது. இப்போது பாங்க் ஆப் பரோடாவில் வீட்டுக் கடன் வாங்க வேண்டும் என்றால் 8.9 சதவிகிதம் முதல் 10.5 சதவிகிதத்திற்கு இடையில் ஹோம் லோன் வழங்கப்படுகிறது. இதுவே மாத சம்பள தாரராக இல்லாமல் வணிகம் போன்றவை செய்பவர்களாக இருந்தால் குறைந்தது 8.95 சதவிகிதம் முதல் 10.6 சதவிகிதங்களுக்கு இடையில் ஹோம் லோன் கிடைக்கும்.

ஹெச்டிஎப்சி வங்கி

ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தும் ஒரு நாள் முன்பே அதனை கணித்து ஹெச்டிஎப்சி வங்கி கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்தது. 30 லடம் ரூபாய் வரையிலான ஹோம் லோன் பெறும் போது 9 சதவிகிதம் முதல் 9.50 சதவிகித வட்டி விகிதத்தில் கடன் வழங்குகிறது. பெண்கள்லுக்கு 8.95 சதவிகிதம் முதல் 9.45 சதவிகித வட்டி விகிதத்தில் கடன் வழங்குகிறது. 30 முதல் 75 லட்சம் ரூபாய் வரையில் கடன் வாங்கும் போது 9.25 சதவிகிதம் முதல் 9.75 சதவிகித வட்டி விகிதம் ஆகிறது. பெண்களுக்கு 9.20 சதவிகிதம் முதல் 9.70 சதவீதம் வட்டி விகிதத்தில் வீட்டு கடன் கிடைக்கிறது.

எஸ்பிஐ ஹோம் லோன்

எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி, ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்து உடன் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்தது. உங்கள் சிபில் ஸ்கோர் 700 முதல் 749 புள்ளிகளாக இருந்தால் 8.95 சதவீதம் வட்டி விகிதம். இதுவே 550 முதல் 649 புள்ளிகளுக்குள் இருந்தால் 9.65 சதவிகிதத்தில் ஹோம் லோன் வழங்குகிறது.

பஞ்சாப் நேஷ்னல் வங்கி

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 30 லட்சம் ரூபாய் வரை ஹோம் லோன் பேறும் போது 8.80 சதவிகிதம் முதல் 9.35 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

Trending

Exit mobile version