பர்சனல் ஃபினான்ஸ்
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்கள்? ஏடிஎம்-ல் ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கனுமா? இதை படிங்க!

எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி, தங்களது வாடிக்கையாளர்களை ஒரு நாளில் 20 ஆயிரம் ரூபாய் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் எடுக்க அனுமதிக்கிறது.
அதுமட்டுமல்லாமல் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், ஏடிஎம்-ல் இருந்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாகப் பணம் எடுக்கும் போது பாதுகாப்பு கருதி, மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச்சொல்லை அனுப்புகிறது. அதை உள்ளிட்டால் மட்டுமே எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களா, 10 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை ஒரே நேரத்தில் எடுக்க முடியும்.
எனவே இங்கு எஸ்பிஐ ஏடிஎம் டெபிட் கார்டுகளின் தினசரி லிமிட்கள் பற்றி இங்கு பார்ப்போம்.
1) எஸ்பிஐ கிளாசிக் & மேஸ்ட்ரோ டெபிட் கார்டு
தினசரி ஏடிஎம் பணம் எடுக்கும் வரம்பு: அதிகபட்சம் ரூ.20,000
2) எஸ்பிஐ குளோபல் இண்டர்னேஷ்னல் டெபிட் கார்டு
தினசரி ஏடிஎம் பணம் எடுக்கும் வரம்பு: அதிகபட்சம் ரூ.40,000
3) எஸ்பிஐ இன்டச் டேப் & கோ டெபிட் கார்டு
தினசரி ஏடிஎம் பணம் எடுக்கும் வரம்பு: அதிகபட்சம் ரூ.40,000
4) எஸ்பிஐ மும்பை பெட்ரோ கோம்போ டெபிட் கார்டு (மும்பை வாடிக்கையாளர்களுக்கு மட்டும்)
தினசரி ஏடிஎம் பணம் எடுக்கும் வரம்பு: அதிகபட்சம் ரூ.40,000
5) எஸ்பிஐ மை கார்டு இண்டர்னேஷ்னல் டெபிட் கார்டு
தினசரி ஏடிஎம் பணம் எடுக்கும் வரம்பு: அதிகபட்சம் ரூ.40,000
6) எஸ்பிஐ கோல்டு இண்டர்னேஷ்னல் டெபிட் கார்டு
தினசரி ஏடிஎம் பணம் எடுக்கும் வரம்பு: அதிகபட்சம் ரூ.50,000
7) எஸ்பிஐ பிளாட்டினம் இண்டர்னேஷன்ல் டெபிட் கார்டு
தினசரி ஏடிஎம் பணம் எடுக்கும் வரம்பு: அதிகபட்சம் ரூ.1,00,000

















