Connect with us

தமிழ்நாடு

சசிகலா தரப்பினர் பேனர்களை கிழித்தெறிந்த ரவுடி கும்பல்… போலீஸும் உடந்தையா..? – அதிர்ச்சி வீடியோ

Published

on

நேற்று சசிகலா வருகையையொட்டி, வைக்கப்பட்ட பேனர் மற்றும் கட்-அவுட்டுகளை ஒரு ரவுடி கும்பல் கிழித்தெறிந்துள்ளது. இது குறித்தான பரபரப்பு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான சசிகலா, நேற்று தமிழகம் திரும்பியுள்ளார். அவருக்கு பெங்களூருவில் இருந்து தமிழகம் வரை வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பெங்களூருவிலிருந்து ஓசூர், கிருஷ்ணகிரி வழியாக அவர் சென்னை, தியாகராய நகரில் இருக்கும் தனது வீட்டுக்கு வந்தார். இந்தப் பயணம் கிட்டத்தட்ட 22 மணி நேரம் தொடர்ந்தது.

இந்நிலையில் கிருஷ்ணகிரியில் அமமுக தொண்டர்களும், சசிகலாவின் ஆதரவாளர்களும் அவரை வரவேற்று வைத்த பேனர்கள், ஃப்ளெக்ஸுகள் மற்றும் கட்-அவுட்டுகளை ஒரு ரவுனி கும்பல் கிழித்தெறிந்துள்ளது. காரில் கத்திகளை வைத்திருந்த அந்தக் கும்பல், அதை வைத்து வழி நெடுகிலும் பேனர்களை சேதப்படுத்தியுள்ளது. அவர்களைத் தட்டிக்கேட்ட அமமுக தொண்டர்களையும் அந்தக் கும்பல் மிரட்டியுள்ளது. இது குறித்தான வீடியோ வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவில் போலீஸ் தரப்பும் அந்தக் கும்பலுக்கு ஆதரவாக செயல்படுவது போல நடந்து கொள்கிறது. அது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

அதிர்ச்சியளிக்கும் ‘பரபர’ வீடியோ:

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?