தமிழ்நாடு

சசிகலா நீக்கப்பட்டது செல்லும்: நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு!

Published

on

அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக சசிகலா தரப்பு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .தன்னை அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய பொதுக்குழு தீர்மானம் செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா மனுதாக்கல் செய்திருந்தார். அதேபோல் அதிமுகவின் பொதுசேயலாளர் சசிகலாவை பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிமுக தரப்பிலிருந்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் கடந்த சில வருடங்களாக விசாரணைக்கு வந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி அதிமுக பொதுச்செயலாளர் உரிமை கோரி சசிகலா அவர்கள் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்ற மனுவில் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பொதுச்செயலாளர் உரிமை கோர சசிகலாவுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் அவரை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தன்னை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய பொதுக்குழு தீர்மானம் செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன் என சசிகலா கூறியுள்ளார்.

 

Trending

Exit mobile version