இந்தியா

ஆரம்பித்த இடத்திலேயே முடிந்தது.. கண்ணீருடன் விடை பெற்றார் சானியா மிர்சா

Published

on

இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இன்று நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓப்பன் டெனிஸ் கலப்பு இரட்டையர் இறுதி போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து கண்ணீருடன் விடை பெற்றார்.

சானியா மிர்சா போபண்ணா ஜோடி ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் பிரேசில் ஜோடிக்கு எதிராக மோதினார்கள்., இந்த போட்டியில் சானியா மிர்சா ஜோடி வெற்றி பெற்றால் ஓய்வு பெறுவதற்கு முன் விளையாடும் கடைசி போட்டியின் கிராண்ட்ஸ்லாம் பட்டம் அவருக்கு இருந்திருக்கும். ஆனால் இந்த போட்டியில் நேர் செட்களில் சானியா மிர்சா ஜோடி தோல்வி அடைந்ததை அடுத்து அவர் கண்ணீருடன் விடைபெற்றார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு தான் 18 வயதாக இருக்கும்போது இதே மெல்போர்ன் மைதானத்தில் தான் எனது முதல் போட்டியை செரினா வில்லியம்ஸ்க்கு எதிராக விளையாடினேன், இப்போது இதே மைதானத்தில் நான் எனது கடைசி போட்டியையும் முடித்துக் கொள்கிறேன் என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.

மேலும் அவர் தன்னுடைய டென்னிஸ் வாழ்க்கையை குறித்து கூறிக் கொண்டிருக்கும்போது அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை. கண்ணீருடன் அவர் சில நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மீண்டும் மீண்டும் மெல்போர்ன் மைதானத்தில் சில போட்டிகளில் வெற்றி பெற்று உங்கள் அனைவர் இடையே சிறப்பாக விளையாடி இறுதி போட்டி வரை வரும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது உண்மையிலேயே மகிழ்ச்சி தான் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் நான் எனது கடைசி போட்டியில் என் மகன் பார்வையாளராக இருக்கும் நிலையில் விளையாடுவேன் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை என்றும் இந்த மைதானத்தில் நான் எப்போது விளையாட்டினாலும் சொந்த ஊரில் விளையாடுவது போல் இருக்கும் என்றும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றி என்றும் தெரிவித்தார்.

டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு வரப்போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னால் சானியா மிர்சா அறிவித்திருந்த நிலையில் அவர் கடைசியாக ஓய்வு பெறுவதர்கு முன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவரது தோல்வி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version