சினிமா செய்திகள்

விஜய்சேதுபதியுடன் நடிக்க மறுத்த சமந்தா? சமாதானம் செய்து சம்மதம் பெற்ற விக்னேஷ் சிவன்

Published

on

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்க சமந்தா முதலில் மறுப்பு தெரிவித்ததாகவும் ஆனால் விக்னேஷ் சிவன் அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.

விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படம் படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்க சமந்தா முதலில் மறுத்ததாக கூறப்படுகிறது .

நயன்தாராவின் வருங்கால கணவர் தான் இந்த படத்தின் டைரக்டர் என்பதால் கண்டிப்பாக அவர் நயன்தாரா கேரக்டருக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார் என்றும் தனது கேரக்டர் டம்மியாக்கப்படும் என்றும் நினைத்து முதலில் அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது .

ஆனால் விக்னேஷ் சிவன் இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா ஆகிய இருவருக்கும் சம அளவு முக்கியத்துவம் தரப்படும் என்றும் அவர் முழு கதையையும் கூறியபின்னரே நடிகை சமந்தா திருப்தி அடைந்து இந்த படத்தில் நடிக்க சம்மதித்ததாக தெரிகிறது.

இந்த படத்தை பார்த்த சமந்தா மிகவும் மகிழ்ச்சி அடைந்து சொன்ன சொல்லை விக்னேஷ் சிவன் காப்பாற்றி விட்டார் என்று அவருக்கு பாராட்டு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

 

Trending

Exit mobile version