சினிமா செய்திகள்

’தளபதி 66’ படத்தில் சமந்தாவின் குத்துப்பாட்டு? சம்பளம் இவ்வளவா?

Published

on

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது .

இந்த படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் இரண்டாவது நாயகியாக மெஹ்ரின் பிரஸிதா நடிக்க உள்ளார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா நடனமாட இருப்பதாகவும் அதற்காக அவருக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற ’ஓ போட்றியா மாமா என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடிய நிலையில் அந்த பாடல் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி அந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.

அதே போல் தளபதி 66 படத்திலும் ஒரு பாடலுக்கு சமந்தா நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பேச்சுவார்த்தை நடந்து முடிந்து விட்டதாகவும் விரைவில் இந்த பாடலின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப் படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Trending

Exit mobile version