உலகம்

இந்தியாவுக்கு வழங்கும் விலையில் பாகிஸ்தானுக்குக் கச்சா எண்ணெய் வழங்க மருத்து ரஷ்யா!

Published

on

உக்ரைன் மீதான போரைத் தொடர்ந்து உலக நாடுகள் பல ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தன. அதனைச் சமாளிக்க ரஷ்யா, தனது நட்பு நாடுகளுக்குத் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க முன்வந்தது.

இந்த கச்சா எண்ணெய்யைச் சீனா, இந்தியா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் அதிகளவில் இறக்குமதி செய்து வருகின்றன.

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறன.

போரில் போருமளவில் பாதிப்படைந்துள்ள உக்ரைன் இந்தியா ரஷ்யாவுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என கோரிக்கையும் வைத்து வருகிறது.

ஆனால் இந்திய அரசு தங்கள் செலவு குறைவது தான் எங்களுக்கு முக்கியம் என கூறி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவுக்கு வழங்கும் அதே விலையில் பாகிஸ்தானுக்கு கச்சா எண்ணெய்யை வழங்க ரஷ்யா மறுத்துள்ளது.

அதுகுறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பெட்ரோலியத் துறை அமைச்ச முசாதிக் மாலிக், “எங்களுக்குத் தள்ளுபடி விலையில் ரஷ்யா கச்சா எண்ணெய் வழங்குகிறது. ஆனால் அந்த தள்ளுபடி குறைவாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

ரஷ்யா வழங்கும் குறைந்த விலை கச்சா எண்ணெய்யை அதிகளவில் இறக்குமதி செய்யும் இந்தியா, அதனை தங்களது அண்டை நாடுகளுக்குச் சுத்திகரிப்பு செய்து ஏற்றுமதியும் செய்து வருகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருவதால், ரஷ்யாவில் செயல்பட்டு வந்த அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளை சேர்ந்த ஆட்டோமொபைல், டெக்னாலஜி நிறுவனங்கள் அங்கு இருந்து வெளியேறியன. அதனால் ரஷ்யாவில் உள்ள வாகனங்களைப் பழுது பார்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. எங்களது நண்பனான இந்தியா எங்களுக்குக் குறிப்பிட்ட 500 பொருட்களை ஏற்றுமதி செய்து உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்தால் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து தங்களுக்கு வரும் ஆர்டர்களை இழக்க நேரிடும் என இந்திய நிறுவனங்கள் தயங்கி வருகின்றன.

Trending

Exit mobile version