உலகம்

8 கோடி வாடிக்கையாளர்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை இழக்கின்றார்களா? அதிர்ச்சி தகவல்

Published

on

ரஷ்யாவில் சமீபத்தில் ஃபேஸ்புக் தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது பேஸ்புக்கின் மற்றொரு நிறுவனமான இன்ஸ்டாகிராம் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பேஸ்புக்கில் ரஷ்யாவுக்கு எதிரான கருத்துக்கள் அதிகம் பதிவானதை அடுத்து ஃபேஸ்புக்கை ரஷ்யா அதிரடியாக தடை விதித்தது.

இதனை அடுத்து தற்போது இன்ஸ்டாகிராம் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதனால் ரஷ்யாவில் உள்ள 8 கோடி வாடிக்கையாளர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ரஷ்யாவில் உள்ள 8 கோடி வாடிக்கையாளர்கள் இனிமேல் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கை பயன்படுத்த முடியாது என்ற தகவல் ரஷ்ய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Trending

Exit mobile version